/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கழிவுநீர் வடிகால் கல்வெர்ட் உள்வாங்கியதால் பரபரப்பு கழிவுநீர் வடிகால் கல்வெர்ட் உள்வாங்கியதால் பரபரப்பு
கழிவுநீர் வடிகால் கல்வெர்ட் உள்வாங்கியதால் பரபரப்பு
கழிவுநீர் வடிகால் கல்வெர்ட் உள்வாங்கியதால் பரபரப்பு
கழிவுநீர் வடிகால் கல்வெர்ட் உள்வாங்கியதால் பரபரப்பு
ADDED : ஜூன் 14, 2025 07:05 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் கழிவுநீர் வடிகால் மீது போடப்பட்ட கல்வெர்ட் உள்வாங்கியதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் கடைவீதி வழியாக பெண்ணாடம், ஜெயங்கொண்டம் மார்க்கமாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இங்கு பெருவணிக நிறுவனங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் இருப்பதால் எந்நேரமும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.
இந்நிலையில், மழைக்காலங்களில் தண்ணீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் கடைவீதியில் வடிகாலை சீரமைத்து, செல்லியம்மன் கோவில் மார்க்கத்தில் ராட்சத வடிகால் மீது கல்வெர்ட் கட்டப்பட்டது.
கல்வெர்ட் கீழ்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடியிருப்புகளுக்கு ராட்சத குழாய் செல்கிறது. கடந்த சில நாட்களாக அதிக அழுத்தம் காரணமாக குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறி, கல்வெர்ட் சேதமடைந்து, நேற்று பிற்பகல் 12:00 மணிக்கு திடீரென உள்வாங்கியது.
இதனால் கடைவீதியில் இருந்து சாத்துக்கூடல் சாலை மார்க்கத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, பேரிகார்டுகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தி, சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.