/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு பஸ் டயர் வெடிப்பு போக்குவரத்து பாதிப்பு அரசு பஸ் டயர் வெடிப்பு போக்குவரத்து பாதிப்பு
அரசு பஸ் டயர் வெடிப்பு போக்குவரத்து பாதிப்பு
அரசு பஸ் டயர் வெடிப்பு போக்குவரத்து பாதிப்பு
அரசு பஸ் டயர் வெடிப்பு போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூன் 14, 2025 07:03 AM

விருத்தாசலம், : விருத்ததாசலம் ஜங்ஷன் சாலையில், அரசு டவுன் டயர் வெடித்து சாலைன் நடுவே நின்றதால் போக்குவரத்து பாதித்தது.
சேத்தியதோப்பில் இருந்து விருத்தாலத்திற்கு நேற்று காலை 9:15 மணிக்கு 50க்கு மேற்பட்ட பயணிகளுடன், தடம் எண் 31 ஏ-என்ற அரசு டவுன் பஸ் பஸ் வந்து கொண்டிருந்தது. விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து ஜங்ஷன் சாலையில், பஸ் நிலையம் நோக்கி பஸ் வந்த போது, எதிர்பாராத விதமாக பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து பஸ் நின்றது.
பரபரப்பான ஜங்ஷன் சாலையின் நடுவே பஸ் நின்றதால், பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, போக்குவரத்து துறை ஊழியர்கள் வந்து, டயரை மாற்றி, பஸ்சை கொண்டு சென்றனர். இதனால், ஜங்ஷன் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.