Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பெண்ணையாற்றில் வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை! ரூ. 57 கோடியில் பணிகள் விரைவில் துவக்கம்

பெண்ணையாற்றில் வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை! ரூ. 57 கோடியில் பணிகள் விரைவில் துவக்கம்

பெண்ணையாற்றில் வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை! ரூ. 57 கோடியில் பணிகள் விரைவில் துவக்கம்

பெண்ணையாற்றில் வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை! ரூ. 57 கோடியில் பணிகள் விரைவில் துவக்கம்

ADDED : ஜூன் 11, 2025 07:22 AM


Google News
Latest Tamil News
கடலுார்; கடலுாரில் தமிழக முதல்வர் அறிவித்த திட்டங்களில் ஒன்றான தென்பெண்ணையாற்றில் ரூ. 57 கோடி மதிப்பிலான கட்டுமான பணிகள் விரைவில் துவங்க வாய்ப்பு உள்ளது.

தென் மேற்கு பருவகாற்றின் மூலம் மேற்கே பெய்து வரும் மழை மற்றும் வெள்ளநீர் கடலுார் மாவட்டத்தில் வழியாக ஓடி வங்க கடலில் வடிகிறது. இதனால் மழைக்காலங்களில் ஏற்படும் பெரு வெள்ளத்தின் போது ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள நகரங்கள், கிராமங்களில் தண்ணீர் புகுந்து சேதங்களை ஏற்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.

ஆற்றில் தண்ணீர் செல்லக்கூடிய கொள்ளளவை மிஞ்சி தவிர்க்க முடியாத நிலையில் தண்ணீர் திறப்பதால், அருகில் உள்ள கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படுகின்றன. இதை தடுப்பதற்காக ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தினால் கடலுார் பெண்ணையாற்றில் பல இடங்களில் கரைகள் உடைந்து கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படுத்தியது. குறிப்பாக கடலோரப் பகுதியில் உள்ள நாணமேடு, உச்சிமேடு, கண்டக்காடு, குண்டு உப்பலவாடி, தாழங்குடா, சுப உப்பலவாடி, தியாகு நகர், சின்ன கங்கணாங்குப்பம், பெரிய கங்கணாங்குப்பம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து பெண்ணையாற்றின் வடக்கு கரையான பெரிய கங்கணாங்குப்பம் பாலத்தில் இருந்து கடல் பகுதி வரை 5.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரை பலப்படுத்தும் பணி நிறைவேற்றப்பட்டது. 2வது கட்டமாக பெண்ணையாற்று பாலத்தில் துவங்கி குண்டு உப்பலவாடி வரை தென்கரை முழுவதும் சீரமைக்க 9.90 கோடி நிதி ஒதுக்கி பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 4 மாதங்கள் முன்பு கடலுார் வருகை தந்த முதல்வர் ஸ்டாலின், வெள்ள பாதிப்பை தடுக்க பெண்ணையாற்றில் 57 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து இந்த தொகையில் என்னென்ன பணிகள் செய்யப்பட உள்ளன என்பது குறித்து பொதுப்பணித் துறை சார்பில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பாலம் வரை கற்கள் பதிப்பது. இதேப் போன்று, தண்ணீர் வேகம் அதிகம் உள்ள இடங்களிலும் கற்கள் பதிப்பது. கண்டக்காடு பகுதியில் ஆற்றில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் கற்கள் கொட்டுவது.

கடந்த வெள்ளத்தின்போது உடைந்த கரைகளை சீரமைப்பது. பண்ருட்டி அருகே பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவது. பெண்ணையாற்றின் மையத்தில் உள்ள மணல் திட்டை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் திட்ட அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இதற்கான அனுமதி கிடைத்தவுடன் டெண்டர் விடப்படும்.

அடுத்த மாதம் இறுதியில் இப்பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிகள் முழுதும் நிறைவேற்றப்பட்டால் வங்கக்கடலின் வடிகால் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us