/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ எம்.ஆர்.கே., கல்லுாரியில் யோகா தினம் எம்.ஆர்.கே., கல்லுாரியில் யோகா தினம்
எம்.ஆர்.கே., கல்லுாரியில் யோகா தினம்
எம்.ஆர்.கே., கல்லுாரியில் யோகா தினம்
எம்.ஆர்.கே., கல்லுாரியில் யோகா தினம்
ADDED : ஜூன் 24, 2024 06:16 AM

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோயில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி சேர்மன் கதிரவன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். முதல்வர் ஆனந்தவேலு முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சித்திவிநாயகம் வரவேற்றார்.
சிதம்பரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் சாந்தி, பாமா, கலா, சீனிவாசன், பசுபதிராஜா, ராஜகணபதி ஆகியோர், யோகக்கலையின் முக்கியம் குறித்து, செயல்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்து பயிற்சி அளித்தனர். 150 மாணவர்கள் பங்கேற்று யோகா செய்தனர்.
கல்லுாரி நிர்வாக அதிகாரி கோகுலகண்ணன், மேலாளர் விஸ்வநாத், கல்லுாரி என்.சி.சி., அதிகாரி சிற்றரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால் நன்றி கூறினார்.