/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சாக்கடை கழிவு துர்நாற்றம் 2 பெண்கள் திடீர் மயக்கம் சாக்கடை கழிவு துர்நாற்றம் 2 பெண்கள் திடீர் மயக்கம்
சாக்கடை கழிவு துர்நாற்றம் 2 பெண்கள் திடீர் மயக்கம்
சாக்கடை கழிவு துர்நாற்றம் 2 பெண்கள் திடீர் மயக்கம்
சாக்கடை கழிவு துர்நாற்றம் 2 பெண்கள் திடீர் மயக்கம்
ADDED : ஜூன் 24, 2024 06:15 AM
கடலுார் : கடலுார், மஞ்சக்குப்பத்தில் சாக்கடை கழிவு துர்நாற்றத்தால் 2 பெண்கள் மயங்கி விழுந்தனர்.
கடலுார், மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளது. இங்கு, அண்ணா மார்க்கெட் அருகில் கழிவுநீர் கால்வாயில் இருந்து குப்பைகள் எடுக்கப்பட்டு சாலையில் போடப்பட்டுள்ளது.
இதனை அகற்றாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில், சாக்கடை கழிவு அருகில் உள்ள ஒரு கடையில் பணிபுரியும் 2 பெண்கள் நேற்று துர்நாற்றம் தாங்க முடியாமல் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது. உடன், கடை உரிமையாளர் தண்ணீரை தெளித்து காப்பாற்றினார்.