/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ உலக ரத்த கொடையாளர்கள் தினம் கடலுாரில் மனித சங்கிலி உலக ரத்த கொடையாளர்கள் தினம் கடலுாரில் மனித சங்கிலி
உலக ரத்த கொடையாளர்கள் தினம் கடலுாரில் மனித சங்கிலி
உலக ரத்த கொடையாளர்கள் தினம் கடலுாரில் மனித சங்கிலி
உலக ரத்த கொடையாளர்கள் தினம் கடலுாரில் மனித சங்கிலி
ADDED : ஜூன் 15, 2024 05:54 AM

கடலுார்: கடலுார் டவுன் ஹால் எதிரில், உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி மற்றும் ரத்த தான முகாம், தொடர் ரத்த கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட குருதி பரிமாற்றுக்குழு அலுவலர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மேற்பார்வையாளர் கதிரவன் வரவேற்றார். கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டு தன்னார்வ ரத்த கொடையாளர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். தொடர்ந்து, ரத்த தான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கரை ஆட்டோவில் ஒட்டினார். இதில், அரசு தலைமை மருத்துவமனை செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவியர் மற்றும் தன்னார்வ ரத்த கொடையாளர்கள் மனித சங்கிலியில் ஈடுபட்டனர். அப்போது, அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர், மாவட்ட திட்ட மேலாளர் செல்வம், ஏ.ஆர்.டி., முதுநிலை டாக்டர் தேவ்ஆனந்த், ரத்த மைய டாக்டர் வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.