/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி கோரிக்கை ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி கோரிக்கை
ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி கோரிக்கை
ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி கோரிக்கை
ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி கோரிக்கை
ADDED : ஜூன் 15, 2024 05:52 AM

திட்டக்குடி: திட்டக்குடி வட்டத்தில் வீட்டுமனை இல்லாமல் தவிக்கும் ஏழை ஆதிதிராவிட மக்களுக்கு, இலவச வீட்டுமனை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் பேரின்பம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அவர் கூறியதாவது, கடலுார் மாவட்டம், திட்டக்குடி தொகுதி ஆதிதிராவிட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. ஆனாலும், வீட்டுமனை இல்லாமல் தொகுதி முழுவதும் ஆயிரக்கணக்கானோர் தவிக்கின்றனர்
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வீட்டுமனை வழங்கியிருந்தாலும், தற்போது ஒரேவீட்டில் மூன்று, நான்கு குடும்பங்கள் வசிக்கும் அவலநிலை உள்ளது. தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பில், வீட்டுமனை இல்லாத ஏழை ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக்கோரி சுமார் 600 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திட்டக்குடி தாசில்தாரிடம் சிறுமுளை, பெருமுளை, நாவலுார், கோடங்குடி, நெடுங்குளம், பெருமுளை, வதிஷ்டபுரம், மேலுார், கோனுார் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். மனு கொடுத்து ஓராண்டாகியும் நடவடிக்கை இல்லை. வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீட்டுமனை வழங்கும் இடத்தில் குடிநீர் வசதி, தெருவிளக்கு, கழிவறை, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என தெரிவித்தார்.