ADDED : ஜூன் 15, 2024 05:55 AM

கடலுார்: கடலுார் ஹாக்கி அகாடமி மற்றும் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி இணைந்து மாநில அளவிலான ஹாக்கி போட்டி நடத்தின.
கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்த போட்டிக்கு ஹாக்கி அகாடமி பொதுச் செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
தலைவர் சிவக்குமார் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார். இதில், சென்னை, புதுச்சேரி, கடலுார், தஞ்சாவூர், சிவகங்கை உட்பட 14 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. முதல் நாளான நேற்று 4 போட்டிகள் நடந்தது.
வரும் 17ம் தேதி மாலை பரிசளிப்பு விழா நடக்கிறது.
ஏற்பாடுகளை கடலுார் ஹாக்கி அகாடமி செய்து வருகிறது.