/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பலாப்பட்டு புதிய துணைமின் நிலையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது பலாப்பட்டு புதிய துணைமின் நிலையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது
பலாப்பட்டு புதிய துணைமின் நிலையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது
பலாப்பட்டு புதிய துணைமின் நிலையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது
பலாப்பட்டு புதிய துணைமின் நிலையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது
ADDED : ஜூலை 22, 2024 01:23 AM

நடுவீரப்பட்டு : பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு ஊராட்சி பலாப்பட்டு கிராமத்தில் துவக்கப்பட்ட துணை மின்நிலையத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு, கீழ்மாம்பட்டு, சிலம்பிநாதன்பேட்டை, சி.என்.பாளையம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு சித்தரசூர் துணை மின்நிலையத்திருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பகுதிகளில் சீரான மின்சாரம் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் சாத்திப்பட்டு ஊராட்சி பலாப்பட்டு கிராமத்தில் 110 கிலோவோல்ட் திறன் கொண்ட புதிய துணைமின்நிலையம் அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.
பணிகள் முடிந்தும் துணை மின்நிலையம் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் நடுவீரப்பட்டு சுற்றியுள்ள கிராமமக்களுக்கு சீரான மின்சாரம் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். தினம் தினம் மின்சாதனபொருட்கள் பழுதடைந்துபொதுமக்களின் பணம் வீணாக விரயமாகி வருகிறது.
சித்தரசூர் துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் வரும் வழியில் அதிகப்படியான நிலங்கள் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள மரங்கள் காற்று வீசும் போது மின்கம்பியில் பட்டு அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.
மேலும் சித்தரசூர் துணைமின்நிலையத்திலிருந்து புதியதாக சி.என்.பாளையம் நகர பகுதிகளுக்கு தனியாக புதிய மின்பாதை அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் துவங்கி அதுவும் ஜவ்வாக இழுத்துக்கொண்டுள்ளது.
ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து பலாப்பட்டு புதிய துணை மின்நிலையம் மற்றும் சி.என்.பாளையம் புதியமின்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.