/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு சிறப்பு பூஜை மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு சிறப்பு பூஜை
மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு சிறப்பு பூஜை
மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு சிறப்பு பூஜை
மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு சிறப்பு பூஜை
ADDED : ஜூலை 22, 2024 01:23 AM
நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் குழந்தைசுவாமி சித்தருக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.
சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள பாலசித்தர் குழந்தைசுவாமி சித்தருக்கு நேற்று ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜையை முன்னிட்டு நேற்று காலை 11:00 மணிக்கு சிறப்பு யாகபூஜைகள் நடந்தது.
அதனை தொடர்ந்து மதியம் 12:30 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து,யாகபூஜையில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து சித்தருக்கு கலச அபிஷேகம் நடந்தது.மதியம்1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அமுது படைத்தல் நடந்தது.
பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சித்தர் குழந்தை சுவாமியை வழிபட்டனர்.
பூஜைக்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் உபயதாரர் கே.என்.பேட்டை இதயநிதி மற்றும் விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.