ADDED : ஜூலை 22, 2024 01:24 AM
பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே ரயிலில் அடிபட்டு இறந்த வாலிபர் குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணாடம் ரயில் நிலையத்தில் இருந்து, திருச்சி செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத ஆண் சடலம் ரயில் பாதையையொட்டி கிடப்பதாக விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சடலத்தை கைப்பற்றி, இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்ததில், பெண்ணாடம், சிலுப்பனுார் சாலை தெருவைச் சேர்ந்த குத்புதீன் மகன் இப்ராஹிம், 29, என்பதும், தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.