/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாலாஜா ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை வாலாஜா ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
வாலாஜா ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
வாலாஜா ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
வாலாஜா ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
ADDED : ஜூலை 22, 2024 01:24 AM

சேத்தியாத்தோப்பு : கடலுார் மாவட்டம், பின்னலுார் வாலாஜா ஏரியில் கீழ்பகுதியை மட்டும் நெய்வேலி என்,எல்.சி., நிறுவனம் கடந்த 2013-14 ஆண்டு துார்வாரி கரையை பலப்படுத்தியுள்ளது.
கரையில் வனத்துறையின் கீழ் தேக்கு மரம் வளர்ப்பு திட்டத்தில் பின்னலுாரில் துவங்கி கரைமேடு, மருவாய் வரை சுமார் 3 கிலோ மீட்டர் துாரம் தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
தேக்கு மரக்கன்றுகளை வளரவிடாமல் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் படர்ந்து காடாக வளர்ந்து வருகிறது. வனத்துறையினர் மரக்கன்றுகளை நட்டதோடு அதனை பெயரளவில் கூட பராமரிக்காத நிலையில் தேக்கு மரங்கள் வளர்ந்துள்ளது.
தேக்கு மரம் பெரிதாக வளரமுடியாததற்கு சீமை கருவே மரங்கள் காரணமாக இருந்து வருகின்றன.ஏரிக்கரையும் ஆங்காங்கே பிளவு ஏற்பட்டு சில இடங்களில் சரிந்துள்ளதையும் சீரமைக்கப்படாமல் உள்ளது. நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மைகொண்ட சீமை கருவே மரங்கள் காடாக வளர்ந்துள்ளது.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வாலாஜா ஏரிக்கரையை நேரடி ஆய்வு செய்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலுாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.