/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சதுப்புநிலக் காடுகளின் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் சதுப்புநிலக் காடுகளின் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்
சதுப்புநிலக் காடுகளின் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்
சதுப்புநிலக் காடுகளின் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்
சதுப்புநிலக் காடுகளின் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்
ADDED : ஜூலை 22, 2024 01:24 AM

கடலுார் : கடலுார் அஞ்சல் கோட்டம் மற்றும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக தாவரவியல் துறை இணைந்து சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்புக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, சதுப்புநிலக் காடுகளின் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் தலைமை தாங்கினார். திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலாதேவி, ஃபேக்கல்டி ஆப் சயின்ஸ் மற்றும் டீன் காலேஜ் டெவலப்மெண்ட் கவுன்சில் டீன் (பொறுப்பு) கோதைநாயகி, கடலுார் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் கணேஷ், தாவரவியல் துறைத்தலைவர் தமிழினியன் சிறப்புரையாற்றினர்.
கடந்த 30 வருடங்களாக சதுப்புநிலப் பாதுகாப்புப் பகுதியில் பணியாற்றிய எம்.எஸ்.,சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை முன்னாள் இயக்குநர் செல்வம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்சார் அறிவியல் முன்னாள் டீன் கதிரேசன் கருத்துரை வழங்கினர்.
பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளில் உள்ள மீனவ சமூகங்களின் பிரதிநிதிகள் சதுப்புநிலங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் பாதுகாப்பு குறித்து தங்கள் வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், பண்ருட்டி நியூ ஜான் டூயி பள்ளியில் பயிலும், தபால்தலை கல்வி உதவித்தொகை பெற்ற 13 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
அப்போது, பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவ, மாணவியர், தபால் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.