ADDED : ஜூலை 28, 2024 05:01 AM
புதுச்சத்திரம் : பைக்கில் குட்கா பொருட்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சத்திரம் போலீசார் அத்தியாநல்லூர் டோல்கேட் அருகே, நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்ததில், அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் கடத்தி சென்றது தெரிந்தது.
இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, சிதம்பரம் மெய்க்காவல் தெருவை சேர்ந்த பிரபாகரன், 46;செங்காட்டு தெரு நடராஜன் மகன் ராமநாதன், 35; இருவரையும் கைது செய்து, 150 ஹான்ஸ், 20 கூல் லிப்பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.