/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருத்தாசலம் பீங்கான் கல்லுாரி சேர்க்கை: 30ம் தேதி வரை நீட்டிப்பு விருத்தாசலம் பீங்கான் கல்லுாரி சேர்க்கை: 30ம் தேதி வரை நீட்டிப்பு
விருத்தாசலம் பீங்கான் கல்லுாரி சேர்க்கை: 30ம் தேதி வரை நீட்டிப்பு
விருத்தாசலம் பீங்கான் கல்லுாரி சேர்க்கை: 30ம் தேதி வரை நீட்டிப்பு
விருத்தாசலம் பீங்கான் கல்லுாரி சேர்க்கை: 30ம் தேதி வரை நீட்டிப்பு
ADDED : ஜூலை 28, 2024 05:02 AM
கடலுார் : விருத்தாசலம் பீங்கான் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
விருத்தாசலத்தில் அரசு பீங்கான் தொழில்நுட்ப கல்லுாரி உள்ளது. தமிழகத்திலேயே செராமிக் தொழில்நுட்ப பட்டய படிப்பு இக்கல்லுாரியில் மட்டுமே வழங்கப்படுகிறது. செராமிக் கம்பெனிக்கு தேவைப்படும் மாணவர்கள் இக்கல்லுாரியில் இருந்து மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர்.
எனவே, மூன்றரை ஆண்டு பட்டய படிப்பு முடிந்த உடனே மாணவர்களுக்கு வேலை கிடைக்கிறது.
மேலும் ஆன்லைன் அல்லது ஆப்லைன் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ராக் செராமிக்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு கம்பெனிகளிலும், உள்நாட்டு கம்பெனிகளிலும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் செராமிக் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.
நுாறு சதவீத வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் வழங்கப்பட்டு வரும் இக்கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை வரும் 30ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேர விரும்பும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 30ம் தேதிக்குள் நேரில் வந்தால் உடனே ஸ்பாட் அட்மிஷன் மூலம் சேர்க்கை அளிக்கப்படும். கல்லுாரி கட்டணம் ஆண்டிற்கு 2,070 ரூபாய் மட்டுமே.
சேர்க்கை கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் அனைத்தையும் கல்வி உதவித் தொகையாக பெற்றுக் கொள்ளலாம். எனவே, படிக்கும்போதே 7,000 ரூபாய் உதவித் தொகையுடன் தொழிற்சாலை பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இவ்வா அதில் கூறப்பட்டுள்ளது.