/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பிளேடால் கிழித்துக்கொண்ட வாலிபர் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு பிளேடால் கிழித்துக்கொண்ட வாலிபர் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு
பிளேடால் கிழித்துக்கொண்ட வாலிபர் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு
பிளேடால் கிழித்துக்கொண்ட வாலிபர் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு
பிளேடால் கிழித்துக்கொண்ட வாலிபர் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு
ADDED : ஜூலை 21, 2024 06:12 AM
புதுச்சத்திரம்: கஞ்சாவிற்ற வாலிபர் போலீஸ் ஸ்டேஷனிலேயே, கையை பிளேடால் கிழித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பபை ஏற்படுத்தியது.
புதுச்சத்திரம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சத்திரம் அடுத்த கீழ்ப்பூவாணிகுப்பம் தனியார் பாலிடெக்னிக் அருகே, சந்தேகப்படும் படியாக நின்றிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், லாஸ்பேட்டை விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த, ராஜேந்திரன் மகன் மவுலி, 26; என்பதும் கஞ்சா விற்பனை செய்வது தெரிந்தது.
உடன் போலீசார் அவரை போலீசார் புதுச்ச்ததிரம் ஸ்டேஷனுக்கு அழைத்துசென்று விசாரித்தனர்.
அப்போது, என் மீது வழக்கு போட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என, கூறி, கையில் நான்கு இடங்களில் பிளேடால் கிழித்துக்கொண்டார். உடன் சுதாரித்துக்கொண்ட போலீசார், மவுலியை சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சையளித்தனர். பின்னர் மவுலியை கைது செய்த போலீசார், நேற்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.