/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போக்குவரத்து விதிமீறல் ரூ. 1 லட்சம் அபராதம் போக்குவரத்து விதிமீறல் ரூ. 1 லட்சம் அபராதம்
போக்குவரத்து விதிமீறல் ரூ. 1 லட்சம் அபராதம்
போக்குவரத்து விதிமீறல் ரூ. 1 லட்சம் அபராதம்
போக்குவரத்து விதிமீறல் ரூ. 1 லட்சம் அபராதம்
ADDED : ஜூலை 21, 2024 06:13 AM
கடலுார்: கடலுாரில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 105 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
கடலுார் ஆல்பேட்டையில் டி.எஸ்.பி., பிரபு தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில், குடிபோதையில் வாகனம் ஓட்டியது, ெஹல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, கூடுதல் பயணிகளை ஏற்றியது என, போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 105 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.