ADDED : ஜூலை 10, 2024 04:09 AM
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் தனியார் பள்ளியில், திருவள்ளுவர் நகரை சேர்ந்த 16 வயது மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று வகுப்புக்கு சென்ற மாணவி மயங்கி விழுந்தார். ஆசிரியர்கள் உடனடியாக அந்த மாணவியை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணையில் அந்த மாணவி வீட்டிலேயே துாக்க மாத்திரை சாப்பிட்டு பள்ளிக்கு வந்ததாக தெரிகிறது. நெல்லிக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பம் பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியது.