/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மறியலில் ஈடுபட்ட 150 பேர் மீது வழக்கு மறியலில் ஈடுபட்ட 150 பேர் மீது வழக்கு
மறியலில் ஈடுபட்ட 150 பேர் மீது வழக்கு
மறியலில் ஈடுபட்ட 150 பேர் மீது வழக்கு
மறியலில் ஈடுபட்ட 150 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 10, 2024 04:09 AM
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே பு.முட்லுார் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊராட்சி தலைவர் உட்பட 150 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம்-நாகை நான்கு வழிச்சாலையில், பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தாம்பாளையம் கிராம சாலையில், சப்வே அமைக்க கோரி, நேற்று முன்தினம் தீர்த்தாம்பாளையம் கிராம மக்கள், கடலுார்-சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக, பு.முட்லுார் வி.ஏ.ஓ., சேதுமாணிக்கம் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், தீர்த்தாம்பாளையம் ஊராட்சி தலைவர் லோகநாதன் உட்பட 150 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.