/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தொலைக்கல்வி மாணவர் சேர்க்கை விருதை ஆர்.டி.ஓ., துவக்கி வைப்பு தொலைக்கல்வி மாணவர் சேர்க்கை விருதை ஆர்.டி.ஓ., துவக்கி வைப்பு
தொலைக்கல்வி மாணவர் சேர்க்கை விருதை ஆர்.டி.ஓ., துவக்கி வைப்பு
தொலைக்கல்வி மாணவர் சேர்க்கை விருதை ஆர்.டி.ஓ., துவக்கி வைப்பு
தொலைக்கல்வி மாணவர் சேர்க்கை விருதை ஆர்.டி.ஓ., துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 10, 2024 04:12 AM

விருத்தாசலம், : பாரதிதாசன் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி மற்றும் இணையவழிக் கல்வி மைய மாணவர் சேர்க்கையை, ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் துவக்கி வைத்தார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின், திட்டக்குடி தொலைக்கல்வி மற்றும் இணையவழிக் கல்வி மையத்தில் 2024 - 25ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை துவக்க நிகழ்ச்சி, விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.
ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமை தாங்கி, இளங்கலை, முதுகலை எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாணவர்களுக்கு விண்ணப்பங்களை வழங்கினார். மேலும், கிராமப்புற மாணவர்கள் பள்ளிக் கல்வியோடு படிப்பை நிறுத்தி விடாமல், உயர்கல்வியை கற்பதால் கிடைக்கும் நன்மைகள், அரசு சலுகைகள், மாணவிகளுக்கு திருமணம், வேலைவாய்ப்பில் கிடைக்கும் சலுகைகள், சுயதொழில் வேலை வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
ஒருங்கிணைப்பாளர் டாக்டர் லெனின், ஆசிரியர் மலர்மன்னன் உட்பட பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் லட்சுமி, அனிதா, பரமேஸ்வரி, சுகுணா, சங்கரி, சவுந்தர்யா உடனிருந்தனர்.
மைய மேலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.