/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஜூலை 10, 2024 04:18 AM

கடலுார், கடலுாரில், மீனவ இளைஞர்களுக்கு, காவல் துறை சார்பில், திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு துவங்கியது.
கடலுார் மாவட்ட கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில், மீனவ இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் துவக்க விழா கடலுார் எஸ்.பி., அலுவலக கலந்தாய்வு கூடத்தில் நேற்று நடந்தது. எஸ்.பி., ராஜாராம் துவக்கி வைத்தார்.
இதில், கடற்படை மற்றும் கடலோர காவல் பாடையில் சேரும், கடலுார் மாவட்ட மீனவர்கள் வாரிசுகள் 40 பேருக்கு, 3 மாதம் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் மீன் வளத்துறை இணை இயக்குனர் வேல்முருகன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம், கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் பத்மா, எஸ்.ஐ.,க்கள் பிரபாகரன், கதிரவன்,வெங்கடேசன், சக்திகணேஷ், ரமேஷ்மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.