வெடிபொருட்கள் வைத்திருந்தவர் கைது
வெடிபொருட்கள் வைத்திருந்தவர் கைது
வெடிபொருட்கள் வைத்திருந்தவர் கைது
ADDED : ஜூன் 08, 2024 04:57 AM
சிதம்பரம் : நாட்டு வெடி தயாரிக்க வெடிபொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் அண்ணாமலை நகரில், அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்து விற்பனை செய்வதாக, தகவல் கிடைத்தது. அதன்பேரில், அண்ணாமலை நகர் போலீசார், சாலியந்தோப்பு சாரதாராம் கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர், 54; என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர், அனுமதியின்றி, நாட்டு வெடி தயாரிக்க வெடிபொருட்கள் வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிந்து, வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.