மறியலில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்கு
மறியலில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்கு
மறியலில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 08, 2024 04:57 AM
சிதம்பரம் : சிதம்பரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சிதம்பரம் அடுத்துள்ள துணிசரமேடு கிராமத்தில், சாலை பணி நிறுத்தியதை கண்டித்து அப்பகுதியினர் நேற்று முன்தினம், சிதம்பரம் - காட்டுமன்னார்கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சிதம்பரம் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மறியலில் ஈடுபட்டதாக, துணிசரமேடு பகுதியை சேர்ந்த முகிலன் ,40; பாக்யராஜ், 42; உதயகுமார்,55; சபரிராஜன், 28; பிரேம், 29; சுதா, 50; ஆகிய 6 பேர் மீது, சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.