ADDED : ஜூன் 08, 2024 04:57 AM

பண்ருட்டி : பண்ருட்டி அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி, கிராம மக்கள் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பண்ருட்டி அடுத்த விசூர் ஊராட்சி மணலுார் ஆதிதிராவிடர் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருபவர்கள், இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
வி.சி. கட்சி ஒன்றிய செயலாளர் உத்தமன் தலைமையில், பண்ருட்டி தலைமையிடத்து துணை தாசில்தார் பாலமுருகனிடன் மனு அளிக்கப்பட்டது.