/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது
கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது
கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது
கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது
ADDED : ஜூலை 22, 2024 01:27 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாதோப்பு அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சோழத்தரம் அருகே கொண்டசமுத்திரம் விராக்குடி தெருவில் உள்ள முருகன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் 5 ஆயிரம் ரூபாய் திருடுபோனது.
இது குறித்து ராஜா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சோழத்தரம் போலீசார் வழக்குப் பதிந்து குற்றவாளியை தேடிவந்தனர்.
இதில் டி.எஸ்.பி.,யின் குற்றப்பிரிவு தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் செல்வபாண்டியன் தலைமையில் எஸ்.எஸ்.ஐ.,ராஜா, விஜயகுமார் ஆகியோர் நேற்று சோழத்தரம் கடைவீதியில் சந்தேகம்படும்படியாக சுற்றித்திரிந்த நபரை குற்றப்பிரிவு போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரத்தைச் சேர்ந்த ரமேஷ், 45; என்பதும் இவர் கிராம கோவில்களை நோட்டமிட்டு உண்டியலை உடைத்து திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளது தெரியவந்தது.
இவர் மீது சோழத்தரம், சேத்தியாத்தோப்பு, கம்மாபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது.
பின்னர் சோழத்தரம் போலீசார் ரமேைஷ கைது செய்து சிறையில் அடைத்தனர்.