/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புவனகிரி முரட்டுவாய்க்காலில் பராமரிப்பு பணிகள் துவக்கம் புவனகிரி முரட்டுவாய்க்காலில் பராமரிப்பு பணிகள் துவக்கம்
புவனகிரி முரட்டுவாய்க்காலில் பராமரிப்பு பணிகள் துவக்கம்
புவனகிரி முரட்டுவாய்க்காலில் பராமரிப்பு பணிகள் துவக்கம்
புவனகிரி முரட்டுவாய்க்காலில் பராமரிப்பு பணிகள் துவக்கம்
ADDED : ஜூலை 22, 2024 01:26 AM

புவனகிரி : புவனகிரி அருகே உள்ள முரட்டு வாய்க்காலில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியல் ரூ.19 லட்சம் செலவில் பொதுப்பணித்துறை சார்பில் சீரமைப்ப பணி துவங்கியுள்ளது.
புவனகிரி அருகே முரட்டு வாய்க்கால் வழியாக வரும் தண்ணீரை தேக்கி சுற்றுபகுதியில் சுமார் 3,500 ஏக்கரில் ஆண்டு தோறும் விவசாயிகள் சாகுடி செய்துவருகின்றனர். மேலும் மழை காலங்களில் வடிகாலாகவும் பயன்படுத்தப்படுவருகிறது.
இந்த வாய்காலில் புவனகிரி-ஆலம்பாடி மற்றும் மருதுார்- வண்டுராயன்பட்டு சாலையில் வாய்க்காங்கரை சாலையில் அமைக்கப்பட்ட ஷட்டரில் இருந்த இரும்பு பீடத்தை மர்ம நபர்கள் சமீபத்தில் திருடிச்சென்றனர். இதனால் ஷட்டர் சரியாக பொருத்தப்படாமல் இருந்தது.
மேலும் பக்க வாட்டு சுவர்கள் இடிந்து விழுந்ததால் குறுகலான சாலையில் விபத்துகளும் அதிகரித்து வந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டது. அதன் எதிரொலியால் பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரப்பிரிவு சேத்தியாத்தோப்பு பிரிவு அலுவலகம் சார்பில் ரூ.19 லட்சம் நிதி ஒதுக்கி பராமரிப்பு பணிகள் துவங்கியுள்ளது.
பணிகளை உதவி பொறியாளர் படைகாத்தான் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.