/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுார் ரயில் நிலையத்தில் பணிகள் மந்தம்; ஒப்பந்ததாரருக்கு கோட்ட மேலாளர் 'டோஸ்' கடலுார் ரயில் நிலையத்தில் பணிகள் மந்தம்; ஒப்பந்ததாரருக்கு கோட்ட மேலாளர் 'டோஸ்'
கடலுார் ரயில் நிலையத்தில் பணிகள் மந்தம்; ஒப்பந்ததாரருக்கு கோட்ட மேலாளர் 'டோஸ்'
கடலுார் ரயில் நிலையத்தில் பணிகள் மந்தம்; ஒப்பந்ததாரருக்கு கோட்ட மேலாளர் 'டோஸ்'
கடலுார் ரயில் நிலையத்தில் பணிகள் மந்தம்; ஒப்பந்ததாரருக்கு கோட்ட மேலாளர் 'டோஸ்'
ADDED : ஜூலை 22, 2024 01:51 AM

கடலுார் : திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில், மேம்பாட்டு பணிகள் மந்தமாக நடப்பதால், ஒப்பந்ததாரருக்கு திருச்சி கோட்ட மேலாளர் 'டோஸ்' விட்டார்.
கடலுார் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையம், மத்திய அரசின் அமிரித் பாரத் ரயில் நிலையம் (ஏ.பி.எஸ்.எஸ்.,) திட்டத்தின் கீழ் ரூ. 6.30 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
நிலைய அலுவலகம் புதுப்பித்தல், வாகன பார்க்கிங் வசதி, பயணிகள் காத்திருப்பு அறை, கழிப்பறை, ரோடு, பூங்கா உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.
பணியை, கோவையை சேர்ந்த ஒப்பந்த நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது. ஆனால் பணிகள் சரியாக நடக்கவில்லை.
இந்நிலையில் நேற்று திருச்சி மண்டல ரயில்வே மேலாளர் அன்பழகன், திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் நடக்கும் ஏ.பி.எஸ்.எஸ்., திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.
கூடுதல் மண்டல ரயில்வே மேலாளர் செல்வம், துணை நிர்வாக இன்ஜினியர் சரவணக்குமார், ரயில்வே பாதுகாப்பு அதிகாரி தட்சிணாமூர்த்தி மற்றும் இன்ஜினியர் கார்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ரயில் நிலையத்தில் பணிகள் சரிவர நடக்காததால் அதிருப்தி அடைந்த மண்டல மேலாளர், பணி துவங்கி ஓராண்டு ஆகியும் ஏன் பணி மந்தமாக நடக்கிறது.
இதனால் ரயில் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். 30 நாட்களில் பணிகளை முடிக்க வேண்டும். இல்லையெனில் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என, ஒப்பந்ததாரரை எச்சரித்தார்.