/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வண்டல் மண் எடுக்கும் பணி தடுத்து நிறுத்தம் வண்டல் மண் எடுக்கும் பணி தடுத்து நிறுத்தம்
வண்டல் மண் எடுக்கும் பணி தடுத்து நிறுத்தம்
வண்டல் மண் எடுக்கும் பணி தடுத்து நிறுத்தம்
வண்டல் மண் எடுக்கும் பணி தடுத்து நிறுத்தம்
ADDED : ஜூலை 21, 2024 06:15 AM
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே வண்டல் மண் எடுப்பதை வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் விவசாயம், மண்பாண்ட பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றிய, பொதுப்பணித்துறை ஏரிகளும் உள்ளன. நல்லுார் ஒன்றிய ஊராட்சிகளில் உள்ள ஏரிகளை ஓவர்சீயர்களும், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்நிலைகளை உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்களும் கண்காணிப்பது வழக்கம்.
அதன்படி, பெண்ணாடம் அடுத்த ஓ.கீரனுார் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் நேற்று பகல் பொக்லைன் மூலம் டிராக்டர்களில் வண்டல் மண் எடுக்கும் பணி நடந்தது. அவ்வாறு மண் எடுக்கும் பணி விவசாய பணிக்கு இல்லாமல் சவுந்திரசோழபுரம், திருமலை அகரம், மாளிகைக்கோட்டம் பகுதிகளுக்கு டிப்பரில் எடுத்துச் செல்லப்பட்டது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் விவசாய பணிக்கு அல்லாமல் விற்பனைக்காக மண் எடுத்துச் செல்வதாக கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தனர். திட்டக்குடி தாசில்தார் அந்தோணிராஜ் அறிவுறுத்தலின் பேரில், பெ.பூவனுார் வி.ஏ.ஒ., செந்தில்ராஜா சம்பவ இடத்திற்கு சென்று வண்டல் மண் எடுப்பவர்களை எச்சரித்து, மண் எடுப்பதை நிறுத்துமாறு தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.