போலீசை தாக்கிய கல்லுாரி மாணவர் கைது
போலீசை தாக்கிய கல்லுாரி மாணவர் கைது
போலீசை தாக்கிய கல்லுாரி மாணவர் கைது
ADDED : ஜூலை 21, 2024 06:15 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் போலீசை தாக்கிய, கல்லுாரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் ஸ்டேட்பாங்க் காலனியை சேர்ந்தவர் பதுருதீன் மகன் முகமதுயாசிர், 22; சென்னையில் தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., படித்து வருகிறார். நேற்று விருத்தாசலம் பஸ் நிலையத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக தனது பைக்கை நிறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு தலைமை செஞ்சிவேல், பைக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்கவாதம் ஏற்பட்டது.இதில், ஆத்திரமடைந்த முகமதுயாசிர், ஏட்டு செஞ்சிவேலை திட்டி தாக்கினார்.
இதுகுறித்து, புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, முகமதுயாசிரை கைது செய்தனர்.