/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கப்பல் விபத்தில் சிக்கிய கணவரை மீட்டு தரக்கோரி மனைவி தர்ணா கப்பல் விபத்தில் சிக்கிய கணவரை மீட்டு தரக்கோரி மனைவி தர்ணா
கப்பல் விபத்தில் சிக்கிய கணவரை மீட்டு தரக்கோரி மனைவி தர்ணா
கப்பல் விபத்தில் சிக்கிய கணவரை மீட்டு தரக்கோரி மனைவி தர்ணா
கப்பல் விபத்தில் சிக்கிய கணவரை மீட்டு தரக்கோரி மனைவி தர்ணா
ADDED : ஜூலை 21, 2024 06:16 AM

கடலுார்: ஓமன் நாட்டில் கப்பல் விபத்தில் சிக்கிய கணவரை மீட்டுத் தரக்கோரி மனைவி கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார், முதுநகரைச் சேர்ந்தவர் தனஞ்ஜெயன் மனைவி எழிலரசி. இவர், கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து நேற்று மாலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.அப்போது, அங்கு வந்த கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார், எழிலரசியிடம் கோரிக்கை குறித்து கேட்டார். அப்போது, எழிலரசி, ஓமன் நாட்டு கடலில் இந்திய மாலுமிகள் சென்ற எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாகவும்,இந்த விபத்தில் சிக்கிய தனது கணவர் மாலுமியான தனஞ்ஜெயனை மீட்டுத் தரக்கோரி ஏற்கனவே இங்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. விபத்து நடந்து 6 நாட்கள் ஆகியும் கணவர் பற்றிய எந்த ஒரு தகவலும் தெரியாததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், இனியாவது தனது கணவரை உடனடியாக மீட்டுத் தர வேண்டுமெனக்கூறினார். இதையடுத்துகலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை ஏற்று எழிலரசி போராட்டத்தை கைவிட்டார்.