/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கர்நாடகாவில் நடக்கும் ஒலிம்பியாட் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு கர்நாடகாவில் நடக்கும் ஒலிம்பியாட் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு
கர்நாடகாவில் நடக்கும் ஒலிம்பியாட் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு
கர்நாடகாவில் நடக்கும் ஒலிம்பியாட் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு
கர்நாடகாவில் நடக்கும் ஒலிம்பியாட் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு
ADDED : ஜூன் 11, 2024 11:51 PM

விருத்தாசலம்,: கர்நாடகாவில் நடக்கும் ஒலிம்பியாட் போட்டிக்கு, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்கள் தேர்வு நடந்தது.
தேசிய யோகாதினம் வரும் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, தேசிய அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை கர்நாடகா மாநிலம் மைசூரில் நடக்கிறது.
இதில், கடலுார் மாவட்ட அரசு பள்ளியளவில் சிறந்த மாணவ மாணவிகள் தேர்வு விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி கலையரங்கத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குனர்கள் அருட்செல்வன், விசாலாட்சி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜராஜசோழன், பிரகாசம், மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு யோகா போட்டியை துவக்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் முருகானந்தம், செந்தில்குமார் விஜயலட்சுமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று மாணவர்களை தேர்வு செய்தனர்.
இதில், மாவட்டத்திற்குட்பட்ட 28 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.