/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கடன் மேளா மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கடன் மேளா
மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கடன் மேளா
மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கடன் மேளா
மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கடன் மேளா
ADDED : ஜூன் 12, 2024 01:44 AM

கடலுார், : கடலுாரில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 2024-25ம் ஆண்டிற்கான கடன் வழங்கும் மேளா நடந்தது.
மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் திலீப்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு அரசு திட்டம் சார்ந்த கடன் மற்றும் விவசாயம் சார்ந்த கடன்கள் பெற விண்ணப்பங்கள் வழங்கினார்.
பொது மேலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். விழாவில், உதவி பொது மேலாளர்கள் செந்தமிழ்ச்செல்வி, பலராமன், அருள், இளங்கோ, மலர்விழி உட்பட பலர் பங்கேற்றனர்.
மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம், புதுப்பாளையம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், கூத்தப்பாக்கம், திருப்பாதிரிப்புலியூர், கடலுார் முதுநகர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி ஆகிய 9 கிளைகளின் எல்லைக்குட்பட்ட 1,200 பேர் பங்கேற்றனர்.