ஸ்ரீமுஷ்ணத்தில் ஜமாபந்தி துவக்கம்
ஸ்ரீமுஷ்ணத்தில் ஜமாபந்தி துவக்கம்
ஸ்ரீமுஷ்ணத்தில் ஜமாபந்தி துவக்கம்
ADDED : ஜூன் 11, 2024 11:50 PM

ஸ்ரீமுஷ்ணம், : ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று துவங்கியது. துவக்க விழாவில் கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் லதா கலந்துக்கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.
இதில் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் கலந்துக்கொண்டு மனுக்கள் வழங்கினர்.
ஜமாபந்தி நிகழ்ச்சியில் 1௪ம்தேதி வரை ஸ்ரீமுஷ்ணம் குறுவட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கும், 18 மற்றும் 2௦ம்தேதி காவனூர் குறுவட்டத்திற்குட்பட்ட கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்களும் மனுக்கள் வழங்கலாம்.நிகழ்ச்சியில் ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் சேகர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்வேல், மண்டல துணை தாசில்தார் சிவகண்டன், தலைமையிடத்து துணை தாசில்தார் சுமதி, ஆர்.ஐ.பிரேம்குமார் வி.ஏ.ஓ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.