ADDED : ஜூன் 11, 2024 11:50 PM

புவனகிரி : புவனகிரி தாலுகா அலுவலகத்தில் இந்த ஆண்டிற்கான ஜமாபந்தி நேற்று 11ம் தேதி துவங்கியது.
கடலுார் தனித்துணை கலெக்டர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். தாசில்தார் தனபதி, மண்டல துணை தாசில்தார் ஆனந்தி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமிழ்ச்செல்வி, தலைமை நில அளவையர் சாகுல்அமீது மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.
நேற்று 11 ம் தேதி பரங்கிப்பேட்டை குறு வடத்திற்கு மனுக்கள் பெற்றனர். இன்று 12 ம் தேதியும் பரங்கிப்பேட்டை குறு வடத்திற்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகின்றனர். 13 மற்றும் 14 ம் தேதிகளில் புவனகிரி குறு வட்டங்களை சேர்ந்தவர்களும், 18 மற்றும் 20ம் தேதிகளில் சேத்தியாத்தோப்பு குறு வட்டத்தை சேர்ந்தவர்கள் மனு அளிக்கலாம் என அறிவித்துள்ளனர். முதல் நாளான நேற்று முறையான தகவல் தெரியாமல் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது.