/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சார் பதிவாளர் அலுவலகத்தில் துணை கலெக்டர் திடீர் ஆய்வு சார் பதிவாளர் அலுவலகத்தில் துணை கலெக்டர் திடீர் ஆய்வு
சார் பதிவாளர் அலுவலகத்தில் துணை கலெக்டர் திடீர் ஆய்வு
சார் பதிவாளர் அலுவலகத்தில் துணை கலெக்டர் திடீர் ஆய்வு
சார் பதிவாளர் அலுவலகத்தில் துணை கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : ஜூன் 11, 2024 11:49 PM
புவனகிரி : புவனகிரி சார் பதிவாளர் அலுவலகத்தில் துணை கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புவனகிரி போலீஸ் நிலையம் அருகில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்கு வரும் பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்காமல் அலைகழிக்க வைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட சிலர் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் திடீரென பத்திரப்பதிவுத்துறை குறை தீர் அலுவலர் ராணி ஆய்வு செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தால் இதர பணிகளுக்கு வந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இந்த ஆய்வு ஆண்டிற்கு ஒரு முறை நடப்பது தான் இதை பெரிது படுத்த வேண்டாம் என புவனகிரி பத்திரப்பதிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.