/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு டவுன் பஸ் இயக்க செம்பேரி மக்கள் கோரிக்கை அரசு டவுன் பஸ் இயக்க செம்பேரி மக்கள் கோரிக்கை
அரசு டவுன் பஸ் இயக்க செம்பேரி மக்கள் கோரிக்கை
அரசு டவுன் பஸ் இயக்க செம்பேரி மக்கள் கோரிக்கை
அரசு டவுன் பஸ் இயக்க செம்பேரி மக்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 16, 2024 10:39 PM
பெண்ணாடம் : பெண்ணாடம் வழியாக செம்பேரி சென்ற அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டக்குடியில் இருந்து பெண்ணாடம் வழியாக செம்பேரிக்கு தடம் எண் 4 அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது.
இந்த பஸ்சை பயன்படுத்தி பெண்ணாடம், சவுந்திரசோழபுரம், செம்பேரி மற்றும் அரியலுார் மாவட்டம், கோட்டைக்காடு, ஆலத்தியூர், புதுப்பாளையம், தெத்தேரி, முதுகுளம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு வெளியூர் சென்று வந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதி கிராம மக்கள் பைக், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் பெண்ணாடம் வந்து, அங்கிருந்து திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிக்கு செல்லும் நிலை உள்ளது.
நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி, கிராம மக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், கிராம மக்கள், விவசாயிகள் வெளியூர் செல்ல மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
எனவே, செம்பேரிக்கு மீண்டும் டவுன் பஸ் இயக்க மக்கள் பிரதிநிதிகள், போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.