/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பொதுவிநியோக திட்ட குறைக்கேட்பு கூட்டம் பொதுவிநியோக திட்ட குறைக்கேட்பு கூட்டம்
பொதுவிநியோக திட்ட குறைக்கேட்பு கூட்டம்
பொதுவிநியோக திட்ட குறைக்கேட்பு கூட்டம்
பொதுவிநியோக திட்ட குறைக்கேட்பு கூட்டம்
ADDED : ஜூன் 16, 2024 10:39 PM
கடலுார் : கடலுார் தாசில்தார் அலுவலகத்தில் பொதுவிநியோகம் திட்ட குறைகேட்பு கூட்டம் நடந்தது.
லோக்சபா தேர்தல் நன்நடத்தை விதிகளின் படி கடந்த மூன்று மாதங்கள் குறைக்கேட்பு கூட்டம் நடக்கவில்லை. தேர்தலுக்கு பின்னர் நடக்கும் முதல் பொதுவிநியோக திட்ட குறைக்கேட்பு கூட்டத்திற்கு குடிமைப் பொருள் வழங்கல் துறை தனி தாசில்தார் ஜெயக்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
கடலுார் வட்டத்தில் இருந்து பொதுமக்கள் பங்கேற்று, ரேஷன் கார்பில் மொபைல் எண் மாற்றம், பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி மாற்றம் என, பல்வேறு மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்கள் மீது உடனடி தீர்வு கண்டு மாற்றம் செய்து கொடுக்கப்பட்டன. இந்த வாரத்தில் பொதுவிநியோகம் துறை குறித்து 113 கோரிக்கை மனுக்கள் ஆன் லைன் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்கின்றனர்.
நிகழ்ச்சியில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரம்யா, இளநிலை வருவாய் ஆய்வாளர் இளம்பிறை, வருவாய் ஆய்வாளர் விக்னேஷ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.