ADDED : ஜூலை 27, 2024 02:56 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் மணலுார் முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மணிமுக்தாற்றிலிருந்து செடல் அணிந்து ஊர்வலமாக சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.
ஆடிமாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி, நேற்று காலை திரளான பக்தர்கள் மணிமுக்தாற்றில் குவிந்தனர். அங்கு, சக்தி கரகத்துடன் பால்குடம் ஏந்தியும், விமான அலகு குத்தியும் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று பூதாமூர் செங்கழனி மாரியம்மன், தென்கோட்டை வீதி மோகம்பரி மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.