/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பா.ஜ., மாநில செயலாளர் உட்பட 9 பேர் மீது நாகை போலீஸ் வழக்கு பா.ஜ., மாநில செயலாளர் உட்பட 9 பேர் மீது நாகை போலீஸ் வழக்கு
பா.ஜ., மாநில செயலாளர் உட்பட 9 பேர் மீது நாகை போலீஸ் வழக்கு
பா.ஜ., மாநில செயலாளர் உட்பட 9 பேர் மீது நாகை போலீஸ் வழக்கு
பா.ஜ., மாநில செயலாளர் உட்பட 9 பேர் மீது நாகை போலீஸ் வழக்கு
ADDED : ஜூலை 27, 2024 02:57 AM
நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியதாக, பா.ஜ., மாநில செயலாளர் உள்ளிட்ட ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் 9பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
நாகப்பட்டினம் அருகே நாகூரை சேர்ந்தவர் தங்க முத்துக்கிருஷ்ணன். சிவசேனா மாநில செயலாளரான இவரது மனைவி தங்கம், கடந்த 1995 ம் ஆண்டு ஜூலை., 3ம் தேதி பார்சல் வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். அதையடுத்து, ஆண்டுதோறும் தங்கம் அம்மாள் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு ஹிந்து அமைப்பினர், பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்று வருகின்றனர்.
நாகப்பட்டினத்தில் கடந்த ஆண்டு நடந்த நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து பேசியதாக தெரிகிறது. இதற்கு வி.சி., கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமாதானம் செய்தனர். இதனால், கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து இரு தரப்பினரும் நாகூர் போலீசில் புகார் அளித்தனர். மேலும், வி.ஏ.ஓ., தேவகுமாரிடம் புகார் பெற்று கூட்டத்தில் கலந்துக் கொண்ட ஹிந்து திராவிட மக்கள் கட்சி நிறுவனர் ரமேஷ்பாபு மீது போலீசார் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
கடந்த ஆண்டு பிரச்னை ஏற்பட்டதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என காரணம் கூறி, இந்த ஆண்டு ஜுலை 3 ம் தேதி, தங்கம் அம்மாள் நினைவு நாள் கூட்டத்திற்கு, நாகூர் போலீசார் அனுமதி மறுத்தனர். அதையடுத்து, சிவசேனா மாநில செயலாளர் தங்க முத்துக்கிருஷ்ணன், கடந்த 27 ஆண்டுகளாக கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் பிரச்னை இல்லை என, பல்வேறு காரணங்களை தெரிவித்து, இந்த ஆண்டு கூட்டம் நடத்த அனுமதிகோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். விசாரணை நடத்திய ஐகோர்ட், சில நிபந்தனைகளுடன் கூட்டம் நடத்த அனுமதி அளித்தது.
அதையடுத்து, கோர்ட் நிபந்தனையுடன், கடந்த 7 ம் தேதி, நாகூரில் தங்கம் அம்மாள் நினைவு நாள் கூட்டம் நடத்தப்பட்டது. பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன் உட்பட பல்வேறு ஹிந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று பேசினர்.
இந்நிலையில், கூட்டத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக, சிவசேனா மாநில செயலாளர் தங்கமுத்துக்கிருஷ்ணன், பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன் மற்றும் ஹிந்து அமைப்புகளை சேர்ந்த குடந்தை பாலா, விஜயகிருஷ்ணன், கண்ணதாசன், சுப்பிரமணியன், பிரபு, ராஜகுரு, செல்வம் ஆகிய 9 பேர் மீது, நாகூர் போலீசார் 206/24, US196,299, 353(1), 353(2), 352BNS ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக தங்க முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட ்ஹிந்து அமைப்பினர் கூறுகையில், கூட்டத்தில் யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையிலோ, மத உணர்வுகளை துாண்டும் வகையில் நாங்கள் பேசவில்லை, அபுபக்கம் சித்திக் என்ற தீவிரவாதியை கடந்த 29 ஆண்டுகளாக போலீசார் கைது செய்யாமல் தேடி வருகின்றனர். அவரின் தலைக்கு பரிசு அறிவித்துள்ளனர் என, போலீசை மட்டுமே சுட்டிக்காட்டி பேசப்பட்டது. கடந்த 27 ஆண்டுகளாக கூட்டம் நடத்தி வருகிறோம், இதுவரையில் இதுபோன்று எந்த இடையூறும் வந்ததில்லை. தற்போது வேண்டுமென்றே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என, தெரிவிக்கின்றனர்.