ADDED : ஜூலை 20, 2024 05:23 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி செந்தில் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், தமிழ்நாடு ரோப் ஸ்கிப்பிங் விளையாட்டு சங்கம் பார் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் சங்கம் சார்பில், 2வது மாநில அளவிலான ரோப் ஸ்கிப்பிங் பயிற்சி முகாம் நடந்தது.
முகாமிற்கு, மாநில தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் கமலேஸ்வரன், சங்க துணை தலைவர் பூவராகவன் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி முன்னாள் துணை ஆய்வாளர் மற்றும் புதுச்சேரி ரோப் ஸ்கிப்பிங் விளையாட்டு சங்க பொது செயலாளர் ஞானசேகரன், முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
முகாமில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
முகாமில், விருத்தாசலத்தை சேர்ந்த மாணவர்கள் ராஜேஸ்வரி, ஷர்மி, ஆஷிகா, ஆதித்யா ஆகியோர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இவர்களை பயிற்சியாளர் ரகுநாத் வாழ்த்தினார்.