/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருத்தாசலத்தில் அனைத்து ரயில்கள் நின்று செல்ல கோரி எம்.பி.,யிடம் மனு விருத்தாசலத்தில் அனைத்து ரயில்கள் நின்று செல்ல கோரி எம்.பி.,யிடம் மனு
விருத்தாசலத்தில் அனைத்து ரயில்கள் நின்று செல்ல கோரி எம்.பி.,யிடம் மனு
விருத்தாசலத்தில் அனைத்து ரயில்கள் நின்று செல்ல கோரி எம்.பி.,யிடம் மனு
விருத்தாசலத்தில் அனைத்து ரயில்கள் நின்று செல்ல கோரி எம்.பி.,யிடம் மனு
ADDED : ஜூலை 20, 2024 05:24 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத், தேஜஸ் உள்ளிட்ட அனைத்து சிறப்பு ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என, விஷ்ணு பிரசாத் எம்.பி.,யிடம் மனு கொடுக்கப்பட்டது.
விருத்தாசலம் வந்திருந்த கடலுார் எம்.பி., விஷ்ணு பிரசாத்திடம், நகர அனைத்து வர்த்தகர்கள் நலச்சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அதில், விரைவில் தனி மாவட்டமாக உருவாக உள்ள விருத்தாசலம் மிகவும் முக்கியமான நகரம் ஆகும். நெய்வேலி என்.எல்.சி., இந்தியா லிமிடெட், பெண்ணாடம் சிமென்ட் மற்றும் சர்க்கரை ஆலைகள், மாவட்டத்தில் மிகப்பெரிய மார்க்கெட் கமிட்டி உள்ளது.
காசியை விட வீசம் பெரிசு என்ற பெயர் பெற்ற விருத்தகிரீஸ்வரர் புனித தலம் அமைந்துள்ளது. இவ்வழியாக செல்லும் வந்தே பாரத், தேஜஸ் உள்ளிட்ட அனைத்து சிறப்பு விரைவு ரயில்களும், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். குறிப்பாக இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான விழுப்புரம் - தாம்பரம் பாசஞ்சர் ரயில், விருத்தாசலம் வரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட விஷ்ணு பிரசாத் எம்.பி., அனைத்து ரயில்களும் விருத்தாசலத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். நகர தலைவர் கோபு, செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் சேட்டு முகம்மது, மாநில துணைத் தலைவர் பழமலை, மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன் உடனிருந்தனர்.