/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 20, 2024 05:23 AM

விருத்தாசலம்: கஸ்பா காலனியில், தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, பொதுமக்கள், ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் கஸ்பா காலனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் 13 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள், இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி கோகுலகிறிஸ்டீபன் தலைமையில், நேற்று ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர், ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் கஸ்பா காலனியில் வீடு கட்டி வசித்து வருகிறோம். தனிநபர் ஒருவர், நாங்கள் வசிக்கும் இடம், தனக்கு சொந்தம் என கூறி, மிரட்டி வருகிறார்.
எனவே, ஆர்.டி.ஓ., விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ., விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.