/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு உதவி தொகை பெறுவோர் கணக்கெடுப்பு மாவட்டத்தில் வருவாய்துறை தீவிரம் அரசு உதவி தொகை பெறுவோர் கணக்கெடுப்பு மாவட்டத்தில் வருவாய்துறை தீவிரம்
அரசு உதவி தொகை பெறுவோர் கணக்கெடுப்பு மாவட்டத்தில் வருவாய்துறை தீவிரம்
அரசு உதவி தொகை பெறுவோர் கணக்கெடுப்பு மாவட்டத்தில் வருவாய்துறை தீவிரம்
அரசு உதவி தொகை பெறுவோர் கணக்கெடுப்பு மாவட்டத்தில் வருவாய்துறை தீவிரம்
ADDED : ஜூன் 05, 2024 03:20 AM
சிதம்பரம்: கடலுார் மாவட்டம் முழுவதும் அரசு சார்பில் உதவி தொகை பெறுபவர்கள் கணக்கெடுக்கும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசின், வருவாய் துறையின், சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் பல்வேறு உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில், முதியோர் உதவி தொகை, உதவித்தொகை, விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில், தற்போது ரூ.1000 மகளிர் உரிமைததொகை வழங்கப்படுகிறது.
உதவித் தொகை பெறுவோர் விபரம் குறித்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுக்கும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், தற்போது மாவட்டம் முழுவதும், அரசின் உதவி தொகை பெறுபவர்கள் கணக்கெடுக்கும் பணியில் வருவாய் துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
உதவி தொகை பெறுபவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, பயனாளிகள் உயிருடன் உள்ளனரா, அவர்களிடம் ஆதார் கார்டு நகல், மற்றும் மொபைல் என் பெற்று சாரி பார்த்து வருகின்றனர்.
இதில் பல இடங்களில் உதவி தொகை பெறுவோர் ஊரில் இல்லாமல் வெளியூர் சென்று விட்டவர்களுக்கு அடங்குவார்கள். இதனால் பல இடங்களில் உதவி தொகை பெறுபவர்களை கணக்கெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த, ஆதார் கார்டு வாங்கும் பணிகள் முடிந்தபின், உதவி தொகை பெற்றவர்களில் இறந்தவர்கள் மற்றும் தகுதியின்றி அரசின் உதவி தொகை பெறுபவர்கள் பெயர் பட்டியல் நீக்கப்படும் என தெரிகிறது.