/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கருணாநிதி நுாற்றாண்டு விழா விருதையில் நுால் வெளியீடு கருணாநிதி நுாற்றாண்டு விழா விருதையில் நுால் வெளியீடு
கருணாநிதி நுாற்றாண்டு விழா விருதையில் நுால் வெளியீடு
கருணாநிதி நுாற்றாண்டு விழா விருதையில் நுால் வெளியீடு
கருணாநிதி நுாற்றாண்டு விழா விருதையில் நுால் வெளியீடு
ADDED : ஜூன் 05, 2024 03:21 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில், கடலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., மற்றும் எழுத்தாளர் அரங்கம் சார்பில் கருணாநிதி நுாற்றாண்டு விழா மற்றும் நுால் வெளியீட்டு விழா நடந்தது.
தி.மு.க., மாவட்ட செயலாளர் அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். சபாராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், நகர்மன்ற சேர்மன் சங்கவி முருகதாஸ் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் இமையம் வரவேற்றார்.
உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன், சென்னை மாநகர நுாலக ஆணைக்குழு தலைவர் மனுஷ்யபுத்திரன், சினிமா இயக்குனர் கரு.பழனியப்பன், பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியை பர்வீன் சுல்தானா ஆகியோர் கருணாநிதியின் கவிதைகள், நாடகங்கள், வசனங்கள் குறித்து பேசினர்.
முன்னதாக, எழுத்தாளர் இமையம் எழுதிய 'என்றும் இறவா எழுத்துக்காரர் கலைஞர்' என்ற நுாலை அமைச்சர் கணேசன் வெளியிட, அமைச்சர் சக்கரபாணி பெற்றுக் கொண்டார். தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி நன்றி கூறினார்.
ஒன்றிய செயலாளர்கள் கனககோவிந்தசாமி, வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், நகர துணை செயலாளர் ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.