ADDED : ஜூன் 05, 2024 03:21 AM
புவனகிரி: புவனகிரி அடுத்த வடதலைக்குளம் வெட்காளியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
புவனகிரி அடுத்த வடதலைக்குளம் சித்திவிநாயகர், வெட்காளியம்மன் கோவிலில் 26ம் ஆண்டு தீமிதி விழா 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, சக்தி கரகம் மற்றும் அம்பாள் வீதியுலா காட்சி நடந்தது. 30ம் தேதி கணபதி ஹோமத்தோடு பூஜைகள் துவக்கி பல்வேறு அபிஷேக ஆராதனை நடத்தினர். 31ம் செடல் திருவிழா நடந்தது. மாலையில், தீமிதி உற்வசவத்தில் பக்தர்கள் பறக்கும் காவடி, செடல் அணிந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் அங்களார பரமேஸ்வரி உடனுறை தாண்டவராய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சிவக்குமார் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.