/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நாக நாதீஸ்வரர் கோவில் புனரமைக்க கோரிக்கை நாக நாதீஸ்வரர் கோவில் புனரமைக்க கோரிக்கை
நாக நாதீஸ்வரர் கோவில் புனரமைக்க கோரிக்கை
நாக நாதீஸ்வரர் கோவில் புனரமைக்க கோரிக்கை
நாக நாதீஸ்வரர் கோவில் புனரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 19, 2024 11:20 PM

பெண்ணாடம்: நூறு ஆண்டுகள் பழமையான நரசிங்கமங்கலம் நாக நாதீஸ்வரர் கோவிலை புனரமைக்க, இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்ணாடம் அடுத்த நரசிங்கமங்கலத்தில், 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான சிவகாமி அம்மன் உடனுறை நாக நாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடப்பது வழக்கம்.
ஆனால் போதிய பராமரிப்பின்றி, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக புனரமைப்பின்றி கோவில் பாழாவதுடன் சுவர்களில் செடிகள் வளர்ந்து இடிந்து கற்கள் விழுந்து வருகிறது. பாழடைந்த கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், தற்போது ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது.
இக்கோவிலில் பூஜை செய்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும். தீராத நோய் தீரும் என்பது ஐதீகம். இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் இதுநாள் வரை வந்து வழிபட்டும், நேர்த்திக்கடன் செலுத்தியும் செல்கின்றனர். எனவே, நரசிங்கமங்கலத்தில் பாழடைந்த பழமை வாய்ந்த நாக நாதீஸ்வரர் கோவிலை புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.