/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வேளாண் அறிவியல் நிலையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி வேளாண் அறிவியல் நிலையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி
வேளாண் அறிவியல் நிலையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி
வேளாண் அறிவியல் நிலையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி
வேளாண் அறிவியல் நிலையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூன் 19, 2024 11:21 PM

விருத்தாசலம் : தமிழ்நாடு அரசு உயர் கல்வி வழிகாட்டுதல் திட்டத்தின் கீழ், கல்லுாரி மாணவர்களுக்கு விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி கடந்த ஜூன் 1ம் தேதி துவங்கி 15 வரை நடந்தது. இதில் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரி மற்றும் சிதம்பரம் அரசு கலை கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
இந்த பயிற்சி வகுப்பில் மண்புழு உரம் தயாரித்தல், பசுமை உரங்கள் உற்பத்தி, மாடி தோட்டம், காளான் வளர்ப்பு போன்ற தொழிற்சார்ந்த செய்முறை வகுப்புகள் நடத்தப்பட்டது.
பயிற்சியின் முடிவில், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. இதில், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கி பேசினார்.
கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி தாவரவியல் துறைத் தலைவர் அண்ணாமலை வரவேற்றார்.
வேளாண் விஞ்ஞானி காயத்ரி மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் பயிற்சி பெற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர். பேராசிரியர்கள் பரமசிவம், சரவணகுமார் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சிதம்பரம் அரசு கல்லுாரி தாவரவியல் துறை பேராசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.