வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை கூட்டம்
வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை கூட்டம்
வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 19, 2024 11:20 PM

விருத்தாசலம் : விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், மாவட்ட வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஏழுமலை, வேளாண் துணை இயக்குநர் (கலெக்டர் நேர்முக உதவியாளர்) ரவிச்சந்திரன், வேளாண் துணை இயக்குனர் (மாநில திட்டம்) பிரேம் சாந்தி, வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் நடராஜன், மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், வேளாண் உதவி இயக்குனர் தர கட்டுப்பாடு, வேளாண் உதவி இயக்குனர் பயிர் காப்பீடு, அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குநர்கள், வேளாண் அலுவலர்கள் மற்றும் துணை வேளாண் அலுவலர்கள், ஆத்மா தொழில்நுட்ப மேலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை சாகுபடி குறித்து ஆய்வு செய்யப்பட்டு, தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டது.