/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஓட்டு எண்ணிக்கைக்கு இடிக்கப்பட்ட கல்லுாரி வகுப்பறைகள் சீரமைப்பு ஓட்டு எண்ணிக்கைக்கு இடிக்கப்பட்ட கல்லுாரி வகுப்பறைகள் சீரமைப்பு
ஓட்டு எண்ணிக்கைக்கு இடிக்கப்பட்ட கல்லுாரி வகுப்பறைகள் சீரமைப்பு
ஓட்டு எண்ணிக்கைக்கு இடிக்கப்பட்ட கல்லுாரி வகுப்பறைகள் சீரமைப்பு
ஓட்டு எண்ணிக்கைக்கு இடிக்கப்பட்ட கல்லுாரி வகுப்பறைகள் சீரமைப்பு
ADDED : ஜூன் 18, 2024 05:49 AM

கடலுார்: கடலுார் அரசு கலைக் கல்லுாரியில், தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்காக இடிக்கப்பட்ட வகுப்பறை சுவர்கள் சீரமைப்பு பணி நடந்தது.
கடலுார் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையம், கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில் நடந்தது. அதற்காக, 26 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் தேர்தல் துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வகுப்பறைகள் குறுக்கு சுவர்கள் இடிக்கப்பட்டு 6 சட்ட சபை தொகுதி ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டது. மேலும் வகுப்பறை குறுக்கு சுவர்கள் இடிக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையம் ஏற்படுத்தப்பட்டது. ஓட்டு எண்ணும் பணிகள் முடிந்த நிலையில், கல்லுாரி வகுப்புகள் துவங்கியுள்ளதால், இடிக்கப்பட்ட வகுப்பறை சுவர்கள், மீண்டும் அமைக்கும் பணி நடந்து வருகிறது.