/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பு விருதை பஸ் நிலையத்தில் பயணிகள் அவதி தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பு விருதை பஸ் நிலையத்தில் பயணிகள் அவதி
தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பு விருதை பஸ் நிலையத்தில் பயணிகள் அவதி
தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பு விருதை பஸ் நிலையத்தில் பயணிகள் அவதி
தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பு விருதை பஸ் நிலையத்தில் பயணிகள் அவதி
ADDED : ஜூன் 18, 2024 05:49 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருவண்ணாமலை, பழனி,பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு தினசரி பஸ் இயக்கப்படுகிறது.
இங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் தினசரி வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த பஸ் நிலையத்தில், தாறுமாறாக தள்ளுவண்டி பழக்கடைகள் நிறுத்தி சிலர் வியாபாரம் செய்கின்றனர்.
இதன் காரணமாக, பஸ் நிலையத்திற்குள் வரும் பஸ்கள் வெளியே செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும், பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் கடும் அவதியடைகின்றனர்.
எனவே, பயணிகள் நலன் கருதி, பஸ் நிலையத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் தள்ளுவண்டி பழக்கடைகள் மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை ஒழுங்கு படுத்த நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.